இரண்டு சிறுநீரகத்தில் ஒன்று செயல் இழந்து விட்டால் சிறுநீரக நோய் (CKD) என்று கூறலாமா?
அப்படி சொல்ல முடியாது, ஒரு சிறுநீரகம் மட்டும் வேலை செய்தாலும் ரத்தத்தில் இருக்கும் கழிவுகளை எல்லாம் அந்த ஒரு சிறுநீரகமே சுத்தம் செய்து விடும். ஆகையால் அதை சிறுநீரக இழப்பு என்று எடுத்துக் கொள்ள முடியாது.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் சிறுநீரக தானம் செய்பவருக்கும், பெறுபவருக்கும் ஒரு சிறுநீரகம் தான் இருக்கும், அது ஒன்றே ரத்தத்தில் இருக்கும் அத்தனை கழிவுகளையும் சுத்தம் செய்ய போதுமானது.
ஆகையால் ஒரே ஒரு சிறுநீரகம் செயல் இழப்பதால் நோயாளிக்கு எந்தவித கஷ்டங்களும் ஏற்ப்படுவதில்லை.
ஏனென்றால் ரத்தத்தில் இருக்கும் கழிவு ஆகிய கிரியேட்டின் மற்றும் யூரியாவின் அளவு அதன் அளவிலே இருக்கும்.
எப்பொழுது இரண்டு சிறுநீரகமும் செயலிழக்கிறதோ அப்பொழுது யூரியா மற்றும் கிரியேட்டின் அளவு அளவை மீறி செல்லும், அப்பொழுது தான் சிறுநீரக செயலிழப்பு என்று நாம் அறிந்து கொள்ள முடியும்.