சிறுநீரக (கிட்னி) பையாப்ஸி என்றால் என்ன?
சிறுநீரகத்தின் ஒரு சிறு பகுதியை ஊசி மூலம் எடுத்து அதை மைக்ரோஸ்கோப் மூலம் பெரிதாக்கி பார்ப்பது.
இப்படி செய்வது மூலம் என்ன நோய் வந்திருக்கிறது என்று கண்டறிய முடியும். சில சமயம் எதனால் சிறுநீரகம் செயல் இழந்தது என்று கண்டறிய முடியாத நேரத்தில் சிறுநீரக (கிட்னி) பையாப்ஸி தேவைப்படுகிறது.
இந்த கிட்னி பையாப்ஸி Nephrologist எனும் சிறுநீரக மருத்துவர் பரிந்துரைப்பின் பேரில் எடுக்கப்படும் பரிசோதனை ஆகும்.
இந்த பையாப்ஸி பரிசோதனை இரண்டு முறையில் மேற்கொள்ளப்படுகிறது.
1, வெளிப்புற சதையின் வழியாக ஒரு ஊசியை கிட்னியில் செலுத்தி சிறுநீரகத்தின் ஒரு சிறு பகுதியை எடுக்கும் முறை.
2, Open Biopsy: இது ஒரு சிறு அறுவை சிகிச்சை உன் மூலம் எடுக்கும் முறையாகும். இந்த இரண்டு முறைக்கும் மருத்துவமனை தேவை.
கிட்னி பையாப்ஸி பண்ணுவதற்கு முன் உடல் நிலை நலமாக இருக்கிறதா என்று சில பரிசோதனைகளும் ஆய்வுகளும் எடுக்கப்படும்.
ஆஸ்பிரின் போன்ற மருந்துகளை எடுத்துக் கொள்பவராய் இருந்தால் ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு முன்பே அந்த மருந்தை நிறுத்தி வைக்க செய்வார்கள்.
கிட்னி பையாப்சி செய்வதற்கு ஒரு நாள் மருத்துவமனை அனுமதியே போதும், பையாப்ஸி முடிந்த பின் இரண்டு முதல் நான்கு வாரங்களுக்கு எந்த கடினமான உடல் உழைப்பும் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படும், காரணம் ரத்த கசிவு ஏற்பட்டாலும் ஏற்படும் என்று.
சில நேரங்களில் சிறுநீரக பையாப்ஸி முடிந்த பின் சிறுநீரில் ரத்தம் கலந்து வரலாம். பயப்படுவதற்கு ஒன்றுமில்லை, இரண்டு நாளில் சரியாக பட்சத்தில் மட்டும் மருத்துவரை சந்திக்க நேரிடும்.
{இந்த கட்டுரை உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன், உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் வரவேற்கிறோம் அதனால் comment ல தெரிவிக்கவும்.}
மேலும் கட்டுரைகளை படிக்க, எங்களை தொடர்பு கொள்ள
WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFP4GmBKfhrpgksPv0T
& telegram channel link https://t.me/dialysis4life உபயோகிக்கவும்.