டயாலிசிஸ் – அபாயங்கள் மற்றும் நோக்கம்
டயாலிசிஸ் என்பது சிறுநீரகத்தின் செயல்பாட்டை மாற்று வழியில் சிகிச்சையாக கொடுப்பது ஆகும். சில சமயங்களில் கடுமையான சிறுநீரக செயலிழப்பு உள்ள சில நோயாளிகளுக்கு, சிறுநீரகம் சாதாரணமாக செயல்படத் தொடங்கும் வரை, குறுகிய காலத்திற்கு டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படும் .
இருப்பினும், நாள்பட்ட அல்லது இறுதி கட்டத்தில் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டால், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும் வரை அல்லது வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் செய்ய வேண்டும்.
டயாலிசிஸ் ஏன் தேவைப்படுகிறது?
சிறுநீரகம் செயலிழந்து, உடல் தேவைகளை கவனிக்க முடியாமல் போனால், டயாலிசிஸ் தேவைப்படுகிறது. டயாலிசிஸ் பின்வரும் செயல்பாடுகளை செய்கிறது:
உடலில் இருந்து கழிவுகள், உப்பு மற்றும் கூடுதல் திரவத்தை நீக்குகிறது,
சோடியம், பொட்டாசியம் போன்ற சில எலக்ட்ரோலைட்டுகள் சரியான அளவில் பராமரிக்கப்படுவதை உறுதி செய்கிறது.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
டயாலிசிஸ் நோயாளிகள் நோய்த்தொற்றுக்கு அதிக வாய்ப்புள்ளது, இது ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். பாக்டீரியா, பூஞ்சை அல்லது வைரஸ் உடலில் தொடுவதன் மூலம் அல்லது மூக்கு அல்லது வாய் வழியாக தொற்று ஏற்படலாம்.
ஆகையால் கை சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும்.
கைகளை அடிக்கடி கழுவுவதன் மூலமும், ஆல்கஹால் அடிப்படையிலான கை சுத்திகரிப்பாளனை பயன்படுத்துவதன் மூலமும் இதைச் செய்யலாம். சரியான கை கழுவுவதற்கான வழிமுறைகளை மருத்துவரிடமும் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
மருத்துவர் பரிந்துரைத்தபடி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நோய்க்குற்று ஏற்படாது இருக்க வாய்ப்பு அதிகம்.
டயாலிசிஸ் சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் நோயாளிகள் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஹீமோடையாலிசிஸ் மற்றும் பெரிட்டோனியல் டயாலிசிஸ் இரண்டும் பக்கவிளைவுகளைக் கொண்டிருக்கின்றன, டயாலிசிஸ் செய்யப்படும் முறை மற்றும் சிறுநீரகச் செயல்பாட்டின் இழப்பை ஓரளவு மட்டுமே ஈடுசெய்யும். அதனால் மருத்துவரின் ஆலோசனையின்படி மருந்துகள் மற்றும் உணவு முறைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.
{இந்த கட்டுரை உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன், உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் வரவேற்கிறோம் அதனால் comment ல தெரிவிக்கவும்.}
மேலும் கட்டுரைகளை படிக்க, எங்களை தொடர்பு கொள்ள WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFP4GmBKfhrpgksPv0T & telegram channel link https://t.me/dialysis4life உபயோகிக்கவும்.
Plz call me sir, one Doubt, my number ####$$$$##