சிறுநீரக செயலிழப்பின் காரணங்கள்?
சிறுநீரக பிரச்சனைகளை இரண்டு வகையாக பிரிக்கலாம்
1, மருத்துவத்தால் குணப்படுத்தக் கூடியது.
2, அறுவை சிகிச்சையால் குணப்படுத்தக்கூடியது.
மருத்துவத்தால் குணப்படுத்தக் கூடியதை nephrologist எனும் சிறுநீரக மருத்துவர்கள் குணப்படுத்துவார்கள். சிறுநீரகம் செயலற்று டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் வரை nephrologist கையாழ்வார்கள்.
அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலைகள் என்றால் சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலோ, ப்ராஸ்டேட் பிரச்சினை இருந்தாலோ, சிறுநீரக பாதையில் புற்றுநோய் இருந்தாலும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யும்பொழுது urologist மருத்துவர்கள் தேவைப்படுவார்கள்.
சிறுநீரகங்கள் செயலற்று போகும் நிலையை கண்டறிய சுலபமான வழி என்றால் ரத்தத்தில் சீரம் கிரியேட்டின் மற்றும் யூரியாவின் அளவை வைத்து கண்டுபிடித்து விடலாம்.
சில நேரங்களில் சிறுநீரகம் திடீரென்று செயலற்று போகும் காரணம் டயரியா, வாந்தி, மற்றும் மலேரியா ,ஹைப்பர் டென்ஷன், sepsis, சில மருந்துகளின் ஒவ்வாமை, இது மாதிரி சமயங்களில் டயாலிசிஸ் மூலம் அவர்கள் மறுபடியும் குணப்படுத்த முடியும் அவர்கள் சிறுநீரகம் பழைய நிலைமைக்கு திரும்பும்.
அதுவே நாள்பட்ட முறையில் சிறுநீரகம் செயல் இழந்தது என்றால் அதை CKD- chronic kidney disease என்று அழைப்பார்கள் இதை மருத்துவர்கள் குணப்படுத்த முயற்சிப்பார்கள். சிறுநீரகங்கள் அனேகமாக முழுக்க திறனையும் இழந்துவிட்டால் அதை ESKD- End Stage Kidney Disease என்று அழைப்பார்கள்.
இந்த நோய் ஏற்பட இரண்டு முக்கியமான காரணங்கள்- உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்.
நாள்பட்ட முறையில் சிறுநீரகங்கள் செயலிழக்கும் முறையில் எந்த அறிகுறியும் இருக்காது உடம்பில். சில நேரங்களில் ஆரம்ப காலகட்டத்தில் பசியின்மை, வாந்தி, கை கால் மற்றும் முகத்தில் வீக்கங்கள், உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம்.
கிரியேட்டின்2.26 இருக்கிறது மாத்திரைகள் மூலம் சரி செய்து விடலாமா
தோராயமாக இப்பொழுது சிறுநீரகம் அதன் 50 முதல் 60% வேலையை செய்து கொண்டிருக்கிறது, மேற்கொண்டு அதன் சதவீதம் குறையாமல் இருக்க மருந்து மாத்திரைகள் அவசியம். நல்ல டயட் மற்றும் உடற்பயிற்சி கண்டிப்பாக வேண்டும். சிறுநீரக மருத்துவரின் அறிவுரைத்தலின் பேரில் இவை எல்லாம் செய்தால் நீண்ட வருடங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்க முடியும்.
நன்றி.