சிறுநீரக செயல் இழப்பால் ஏற்படும் அறிகுறிகள் என்னென்ன?
சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் நபருக்கு நபர் மாறும்.
1, முகம் வீங்குதல் {Edema} :
முகம் வீங்குதல் மற்றும் கை, கால் வீக்கங்கள் இவை சிறுநீரகம் செயலிழப்பால் ஏற்படும். சிறுநீரகங்கள் செயலிழப்பால் சிறுநீர் சரியான முறையில் வெளியேறாத காரணத்தால் இவை ஏற்படும்.
2, பசியின்மை மற்றும் வாந்தி:
இவர்களுக்கு பசி இன்மை மற்றும் ருசி அறியா தன்மையும் இருக்கும் , எதை சாப்பிட்டாலும் வாந்தி ஏற்படும், உடலில் மெட்டபாலிக் வேஸ்ட்(Metabolic waste) எனும் கழிவுகள் ரத்தத்தில் அதிகமாக ஆனதால் இவை ஏற்படுகிறது.
3, உயர் ரத்த அழுத்தம் {Hypertension}:
சிறுநீரகம் செயல் இழந்ததால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் ஹார்மோன்கள் (Renin) செயல் இழந்து போகும். அதன் காரணமாக உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்.
இது தலைகீழாகவும் நிகழும், இளம் வயதில் உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை இருந்தால் சீக்கிரம் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது.
4, ரத்த சோகை {anemic} :
உடலின் ரத்த உற்பத்தியில் சிறுநீரகத்தின் செயல்பாடு அபரிவிதமானது. எரித்ரோபோயிட்டேன் {Erythropoietin (EPO) } எனும் ஹார்மோனை சிறுநீரகங்கள் தான் உற்பத்தி செய்கிறது. சிறுநீரக செயலிழப்பால் எரித்ரோபோயிட்டேன் {Erythropoietin (EPO)} எனும் ஹார்மோன் உற்பத்தி ஆகாததால் நோயாளிகள் ரத்த சோகையால் அவதிப்படுகின்றனர். இது மிக முக்கியமான சிறுநீரக செயலிழப்பின் அறிகுறி.
5, எண்ணிலடங்கா காரணங்கள்:
உடல் வலி, உடல் சோர்வு, தோலில் அரிப்பு , அடிக்கடி தசை பிடிப்பு, சிறுநீரகத்தில் ரத்தம் கலந்து வருதல், சிறுநீரகத்தில் சீழ் கலந்து வருதல், சிறுநீரக தொற்று (UTI) அடிக்கடி ஏற்படுதல், மற்றும் பல…
இவைகள் ஒருத்தருக்கு இருக்கும் பட்சத்தில் அவருக்கு சிறுநீரகம் செயலிழந்து விட்டது என்று உடனே கூற முடியாது அவருக்கு ரத்தப் பரிசோதனை மற்றும் உடல் பரிசோதனை செய்துவிட்டு தான் முடிவை கூற முடியும்.
எந்த வித அறிகுறி இல்லாமலும் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது. அதனால் ஆறு மாதத்திற்கு ஒரு தடவையோ வருடத்துக்கு ஒரு தடவையும் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது இன்றைய தேதியில் மிகவும் அவசியமாகிறது.
{இந்த கட்டுரை உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன், உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் வரவேற்கிறோம் அதனால் comment ல தெரிவிக்கவும்.}
மேலும் கட்டுரைகளை படிக்க, எங்களை தொடர்பு கொள்ள WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFP4GmBKfhrpgksPv0T & telegram channel link https://t.me/dialysis4life உபயோகிக்கவும்.