சிறுநீரக நோய் மற்றும் பிரச்சனைகளை கண்டறிவது எப்படி?

Kidney Dialysis
சிறுநீரக பிரச்சினைகள் டயாலிசிஸ்Leave a Comment on சிறுநீரக நோய் மற்றும் பிரச்சனைகளை கண்டறிவது எப்படி?

சிறுநீரக நோய் மற்றும் பிரச்சனைகளை கண்டறிவது எப்படி?

Kidney Dialysis

சிறுநீரக நோய்களை கண்டறிவது என்பது மிகவும் சவாலான ஒரு காரியமாகும். அதுவும் ஆரம்ப கட்ட சிறுநீரக நோய் கண்டறிவது என்பது முடியாத காரியமாகவே இருக்கிறது.

ஏனென்றால் அவை பக்க விளைவுகள் அற்றவையாய் இருக்கிறது. அதன் காரணமாகத்தான் ஆறு மாதத்துக்கு ஒரு தடவையோ அல்லது வருடத்துக்கு ஒரு தடவையோ முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம் ஆகிறது.

சிறுநீரக நோயை ஆரம்ப கட்டங்களில் கண்டுபிடித்தால் நவீன கால வைத்தியத்தின் மூலம் கிட்னி செயலிழப்பை நடக்காமல் பார்த்துக் கொள்ள முடியும். அதுவே சிறுநீரக நோய் முற்றிய பின் சிறுநீரக மாற்ற அறுவை சிகிச்சையோ அல்லது டயாலிசிஸ் மட்டுமே வழியாக உள்ளது.

சிறுநீரக நோய் மற்றும் பிரச்சனைகளை கண்டறிவது எப்படி?:

1, நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உடையவருக்கு வாய்ப்பு உள்ளது.

2, பரம்பரை சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு வாய்ப்புள்ளது.

3, உடல் பருமன் அதிகமாக உள்ளவர்கள் புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் வாய்ப்புகள் அதிகம்.

4, வலி நிவாரணி மாத்திரைகளை சகஜமாக மாத கணக்கிலோ அல்லது வருட கணக்கில் எடுப்பவர்களுக்கு வாய்ப்புள்ளது.

சிறுநீரக நோயை கண்டறியும் முறைகள்:

1, சிறுநீர் பரிசோதனை:

சிறுநீரகத்தின் செயல்பாட்டை மிக எளிய முறையில் கண்டுபிடிக்க இந்த பரிசோதனைகளை ஆரம்ப கட்டங்களில் போதுமானது. சிறுநீரிள் புரோட்டின் எனப்படும் புரதம் வெளியேறினால் அவருக்கு சிறுநீரக நோய் உள்ளதா என்று அடுத்த கட்ட பரிசோதனை மேற்கொள்வது அவசியமாகிறது.

2, யூரியா மற்றும் கிரியேட்டின் இரத்த பரிசோதனை :

யூரியா மற்றும் கிரியேட்டின் சிறுநீரகத்தால் வடிகட்டப்பட்டு சிறுநீராக வெளியேறும். இது ரத்தத்தில் அதிகப்படியாக இருந்தால் சிறுநீரகம் தன் வேலையை சரியாக செய்யவில்லை என்று அர்த்தம். இந்த ரத்தப் பரிசோதனையை வைத்து சிறுநீரகத்தின் செயல்பாட்டை உறுதி செய்து கொள்ளலாம்.

3, ஹீமோகுளோபின் (எனும் ரத்தம்):

ஆரோக்கியமான சிறுநீரகம் எரித்ரோபோயிட்டின் எனும் ஹார்மோனை உற்பத்தி செய்து ரத்தத்தில் சிகப்பு அணுக்கள் குறையாமல் பார்த்துக் கொள்ளுப்படுகிறது. இந்த சிகப்பு அணுவை நாம் ஹீமோகுளோபின் என்று அழைப்போம், சிறுநீரக பிரச்சனை இருப்பவர்களுக்கு எரித்ரோபோயிட்டின் பற்றாக்குறையால் ரத்தசோகை ஏற்படுகிறது. இதன் மூலமும் சிறுநீரகத்தின் செயல்பாட்டை நாம் அறிய முடியும்.

ரத்த சோகை மற்ற காரணங்களாலும் வரலாம் அதையும் நாம் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

4, ரத்தம் பரிசோதனைகள்:

ரத்தத்தில் – சக்கரை, புரோட்டின், கொலஸ்ட்ரால், சோடியம், பொட்டாசியம், குளோரைடு, கால்சியம் பாஸ்பரஸ் பை கார்பனேட் போன்ற ரத்தப் பரிசோதனைகள் மூலம் நாம் சிறுநீரகம் எவ்வாறு செயல்படுகிறது என்று அறிந்து கொள்ள முடியும்.

5, Ultrasonography எனும் ரேடியோ கதிர் வீச்சு பரிசோதனை:

இந்த பரிசோதனை சிறுநீரகத்தின் அளவு மற்றும் வளர்ச்சியை கண்டறிய உதவும். சிறுநீரகத்தில் ஏதேனும் கற்கள் அல்லது புண்கள் ஏற்பட்டிருந்தால் கண்டறிய உதவும். சிறுநீரகப் பாதையில் ஏதேனும் தடை இருந்தால் அதையும் கண்டறிய உதவும். இரு சிறுநீரகமும் அளவில் சிறிதாக இருந்தால் அவை பழுதாகிவிட்டது என்று நாம் அறிந்து கொள்ள உதவும்.

6, kidney biopsy (கிட்னி பையாப்சி):

கிட்னி பையாப்சி மூலம் சிறுநீரகம் எவ்வாறு செயல் இழந்தது என்று அறிந்து கொள்ள முடியும். அதை கண்டறிய சிறிய முறையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும், இது அவ்வளவு பெரிய அறுவை சிகிச்சை அல்ல பயப்படுவதற்கு.

இன்றைய தேதியில் பரவலாக எல்லா மருத்துவர்களும் இந்த பரிசோதனை மேற்கொள்கின்றனர் எவ்வாறு சிறுநீரகம் செயல் இழந்தது என்று துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.

{இந்த கட்டுரை உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன், உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் வரவேற்கிறோம் அதனால் comment ல தெரிவிக்கவும்.}

மேலும் கட்டுரைகளை படிக்க, எங்களை தொடர்பு கொள்ள WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFP4GmBKfhrpgksPv0T & telegram channel link https://t.me/dialysis4life உபயோகிக்கவும்.

ஹாய், என் பெயர் விக்னேஸ்வரன்.வெ நான் நெஃப்ராலஜி {Nephrology} துறையில் டயாலிசிஸ் மேலாளராக (Dialysis Manager) மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒருங்கிணைப்பாளராக (Renal Transplant Coordinator) 15 வருடங்களுக்கு மேல் பணியாற்றி வருகிறேன். டயாலிசிஸ் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளை பற்றிய கட்டுரைகளை படிப்பவர்களுக்காக இந்த வலைதளம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top