ஹீமோடையாலிசிஸ் நோயாளிகளுக்கு முக்கியமான இரத்த பரிசோதனை சில:

சிறுநீரக பிரச்சினைகள் டயாலிசிஸ்Leave a Comment on ஹீமோடையாலிசிஸ் நோயாளிகளுக்கு முக்கியமான இரத்த பரிசோதனை சில:

ஹீமோடையாலிசிஸ் நோயாளிகளுக்கு முக்கியமான இரத்த பரிசோதனை சில:

ஹீமோடையாலிசிஸ் நோயாளிகளுக்கு முக்கியமான இரத்த பரிசோதனை சில:

Hb: 10 மற்றும் 11.5gms/dl இடையே Hb ஐ பராமரிக்க வேண்டும். குறைந்த அளவு Hb இதயத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும் மற்றும் மனிதனின் ஆற்றல் குறைவாக இருக்கும்.

இரும்புச் சத்து( Iron study’s )அளவை அவ்வப்போது சரிபார்ப்பது முக்கியமானது.

எரித்ரோபொய்டின் மருந்து இரத்தமாற்றத்தைத்(Blood Transfusion)தவிர்க்க உதவும்.

Urea and Creatinine: சிகிச்சையின் தரத்தை சரிபார்க்க பயன்படுத்தப்படுகிறது. பல நேரங்களில் சிறுநீரக செயல்படுகளையும் கண்கணிக்கா உதவுகிறது

potassium: இரத்தத்தில் இது மிக முக்கியமான எலக்ட்ரோலைட் . இது இரத்தத்தில் அதிக அளவு இருந்தால் இதயத் துடிப்பு(high heart rate) பிரச்சனைகள் மற்றும் இதயத் பிரச்சினை (cardiac arrest)கூட ஏற்படலாம்.

5mg/dl க்கும் குறைவாக இருப்பதுதான் நல்லது.

Bicarbonate: 22meq க்கும் குறைவான அளவு இருந்தால் அவர் சரியான டயாலிசிஸின் சிகிச்சை பெறவில்லை என்று அர்த்தம் மற்றும் சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும்.

Albumin: ஊட்டச்சத்து நிலையைக் குறிக்கிறது. குறைந்த அளவு (<3gms) நல்லதல்ல. டயாலிசிஸில் நல்ல தரமான புரத உணவு தேவை.

Calcium and Phosphorus: டயாலிசிஸில் பாஸ்பரஸ் போதுமான அளவு அகற்றப்படுவதில்லை, இதனால் உட்கொள்ளலைக் குறைக்க பாஸ்பேட் பைண்டர் ஐ மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. அதிக அளவு பாராதைராய்டு ஹார்மோன் (PTH) அதிகரித்தால் எலும்பு பலவீனத்தை ஏற்படுத்துகிறது. எனவே அவ்வப்போது பரிசோதனை செய்து உணவு ஆலோசனைகளை பின்பற்றுவது மிகவும் முக்கியமானது.

Liver function tests and Hepatitis tests: .ஆரம்பகால கல்லீரல் மாற்றங்கள் மற்றும் தொற்று அறிகுறிகளைக் கண்டறிய உதவுகிறது.

Blood sugar: .இன்சுலின் தேவை குறைக்கப்பட்டாலும், நீரிழிவு நோய் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் அதனால் கண்காணிக்கப்பட வேண்டும்.

{இந்த கட்டுரை உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன், உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் வரவேற்கிறோம் அதனால் comment ல தெரிவிக்கவும்.}

மேலும் கட்டுரைகளை படிக்க, எங்களை தொடர்பு கொள்ள WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFP4GmBKfhrpgksPv0T & telegram channel link  https://t.me/dialysis4life  உபயோகிக்கவும்.

ஹாய், என் பெயர் விக்னேஸ்வரன்.வெ நான் நெஃப்ராலஜி {Nephrology} துறையில் டயாலிசிஸ் மேலாளராக (Dialysis Manager) மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒருங்கிணைப்பாளராக (Renal Transplant Coordinator) 15 வருடங்களுக்கு மேல் பணியாற்றி வருகிறேன். டயாலிசிஸ் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளை பற்றிய கட்டுரைகளை படிப்பவர்களுக்காக இந்த வலைதளம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top